மதுரை: பள்ளிக் குழந்தைகளுடன் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய கத்ரினா கைப்- வைரலாகும் வீடியோ

மிகவும் எளிமையான வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கத்ரினா, அரபிக் குத்து பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடினார்.
மதுரை: பள்ளிக் குழந்தைகளுடன் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய கத்ரினா கைப்- வைரலாகும் வீடியோ
Published on

மதுரை,

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கத்ரினா, மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது . இந்த பள்ளியை கத்ரினா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார்.

சுசானே இந்த பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் தான் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று, குழந்தைகளுடன் நடனமாடியிருக்கிறார்.

மிகவும் எளிமையான வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த கத்ரினா, நடிகர் விஜயின் பீஸ்ட் பட பாடலான அரபிக் குத்து பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கத்ரினா, இந்த நிகழ்ச்சியில் மிக எளிமையாக நடந்த கொண்ட விதத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

2020-ஆம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில், இதே பள்ளியில் குழந்தைகளுக்கான வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நன்கொடை வழங்குமாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்ரினா கைப் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com