தாயாகப்போகும் நடிகை கத்ரீனா கைப்


தாயாகப்போகும்  நடிகை கத்ரீனா கைப்
x

கத்ரீனா கைப் - விக்கி கௌஷால் தம்பதி சமூக வலைதளங்களில் தாயாகப்போகும் தகவலை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தாய்மைப்பேறு அடைந்துள்ளார். இந்தத் தகவலை கத்ரீனா கைப் - விக்கி கவுசல் தம்பதி சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கத்ரீனா கைப் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்க்கையில் சாலச்சிறந்த சகாப்தத்தை தொடங்க ஆயத்தமாகியுள்ளோம். எங்கள் மனம் மகிழ்ச்சியாலும் அன்பாலும் நிரம்பியுள்ளது” என்று குறிப்பிட்டு தனது கணவர் விக்கி கௌஷாலுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டு தான் தாய்மைப்பேறு அடைந்துள்ளதை ம்கிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கத்ரீனா கைப் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. கத்ரீனா கைப்புடன் விஜய் சேதுபதி முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்தப் படம் கடந்தாண்டு ஜனவரியில் வெளியானது குறிப்பிடத்தக்கது..

நடிகை கத்ரீனா கைப் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

1 More update

Next Story