கவின் நடித்துள்ள 'டாடா' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கவின் நடித்துள்ள 'டாடா' படத்தின் டீசர் வெளியானது..!
Published on

சென்னை,

'பிக்பாஸ்' புகழ் நடிகர் கவின் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் 'டாடா'. இந்த படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டாடா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நெல்சன் திலீப்குமார், நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com