கவின் நடித்துள்ள "கிஸ்" படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு


‘கிஸ்’ படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான 'லிப்ட்' , 'டாடா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.

தற்போது கவின் 'கிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியானது. பர்ஸ்ட் சிங்கிளான 'திருடி...' என்ற பாடல் வெளியாகி வைரலானது. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இந்நிலையில் 'கிஸ்' படத்தின் 2வது சிங்கிளான 'ஜில்லேலாமா' பாடல் வெளியாகியுள்ளது. 'கிஸ்' படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story