கவினின் “மாஸ்க்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படம் வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாகிறது.
கவினின் “மாஸ்க்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கிஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் கண்ணுமுழி பாடல் வெளியாகி வைரலானது.

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் மாஸ்க் படம் வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com