யுவன் இசையில் 'ஸ்டார்' படத்தின் மெலோடி பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் கவினின் 'ஸ்டார்' படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
யுவன் இசையில் 'ஸ்டார்' படத்தின் மெலோடி பாடல் இன்று மாலை வெளியீடு
Published on

 சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். 

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நடிகர் கவின் தன் டப்பிங் பணிகளை முடித்ததாக முன்னதாக அறிவித்திருந்தார். ஸ்டார் படம் வரும் மே 10 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 6 மணிக்கு படத்தின் மெலோடி பாடல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com