கவினின் 'ஸ்டார்' திரைப்படம் உலகளவில் ரூ.25 கோடி வசூல்

கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படத்தின் உலகளவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கவினின் 'ஸ்டார்' திரைப்படம் உலகளவில் ரூ.25 கோடி வசூல்
Published on

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.

இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ.25 கோடி வரை வசூலித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com