'இதயம் முரளி' படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த கயாடு லோஹர்


இதயம் முரளி படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த கயாடு லோஹர்
x
தினத்தந்தி 4 March 2025 10:50 AM IST (Updated: 4 March 2025 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார்.

சென்னை,

அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது மராத்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார்.

இதற்கிடையில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' என்ற படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2 வாரங்களாக 'டிராகன்' படத்திற்கு நீங்கள் எனக்கு கொடுத்த அன்பால் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமிழ் சினிமாவில் முதல்முதலாக நான் 'இதயம் முரளி' படத்திற்கு தான் எனது லுக் டெஸ்ட் புகைப்படங்களை கொடுத்தேன். விரைவில் இதயம் முரளி படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story