கயடு லோஹரின் அடுத்த படம்...கதாநாயகன் யார் தெரியுமா?


Kayadu Lohars next film...is this the protagonist?
x
தினத்தந்தி 28 Feb 2025 11:35 AM IST (Updated: 28 Feb 2025 1:31 PM IST)
t-max-icont-min-icon

'டிராகன்' படத்திற்கு பிறகு கயடு லோஹருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சென்னை,

அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை.

தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்தற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார் கயடு லோஹர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி தற்போது கயடு, 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக கயடு லோஹர், தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஜாதி ரத்னாலு பட இயக்குனர் கே.வி.அனுதீப்பின் திரைப்படத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'பங்கி' எனப்பெயரிடப்பட்டுளது.

1 More update

Next Story