கயல் ஆனந்தி பகிர்ந்த சினிமா அனுபவங்கள்...!

சினிமா அனுபவங்கள் குறித்து கயல் ஆனந்தி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்
கயல் ஆனந்தி பகிர்ந்த சினிமா அனுபவங்கள்...!
Published on

தமிழில் 'கயல்' படத்தில் நடித்து பிரபலமான ஆனந்தி அந்த படத்துக்கு பிறகு கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். 'பரியேறும் பெருமாள்', 'சண்டி வீரன்', 'திரிஷா இல்லன்னா நயன்தாரா', 'மன்னர் வகையறா', 'என் ஆளோட செருப்ப காணோம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கயல் ஆனந்தி அளித்துள்ள பேட்டியில், "நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அது தானாகவே அமைந்து விடுகிறது. குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகுகிறார்கள்.

'கயல்', 'பரியேறும் பெருமாள்' படவாய்ப்புகள் அப்படித்தான் அமைந்தன. ஆரம்பத்தில் நடிக்கும் ஆசை இல்லை. 'கயல்' படத்தில் நடித்த பிறகுதான் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை.

எனது வாழ்க்கை இப்போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளது. என்னை ரசிகர்களுக்கு இந்த அளவுக்கு பிடிக்கும் என்று நினைக்கவே இல்லை. 'கயல்' படத்தை என்னால் மறக்க முடியாது. அதில் கஷ்டப்பட்டு நடித்தேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com