"கழுகு " பட நடிகரின் 2வது திருமண புகைப்படம் வைரல்

நடிகர் கிருஷ்ணா தனது இரண்டாவது திருமணத்தை எளிமையாக முடித்துள்ளார். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
"கழுகு " பட நடிகரின் 2வது திருமண புகைப்படம் வைரல்
Published on

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிருஷ்ணா,'கழுகு' படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி ஆவார். இவரது தந்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.இவர் வல்லினம், யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யாக்கை, நிபுணன், விழித்திரு, வீரா, களரி, மாரி 2, கழுகு 2, ராயர் பரம்பரை பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் இவரது சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில், சில படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

தற்போது சிலர் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்பவருடன் திருமணமாகி கடந்த 2016-ம் ஆண்டு விவகாரத்தானது. இந்த நிலையில் அவருக்கு மிக எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மனைவியுடன் எடுத்த திரைப்படங்களை பகிர்ந்து புதிய ஆரம்பம் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் அதிகமான லைக்குகள் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com