காவிரி விவகாரத்தை வைத்து இனிமேலும் ஓட்டு அரசியல் செய்யக் கூடாது- கமல்ஹாசன்
சென்னை
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177. 25 டிஎம்சி நீரை ஒதுக்கிட்டு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கமல்ஹாசன் தமிழகத்திற்கான காவிரி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தம் தான். எனினும் தீர்ப்பு அழுத்தமானது என கூறியுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரத்தை ஓட்டு அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. எனினும் காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது என்ற நீதிமன்றத்தின் கருத்து அழுத்தமானது. குறைவான நீர் கிடைத்தாலும் அதை வீணடிக்காமல் முறையாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தை வைத்து இனிமேலும் ஓட்டு அரசியல் செய்யக் கூடாது.
நிலத்தடி நீரை சேமிக்காததில் தமிழக அரசை மட்டும் குறை சொல்லாமல், நாமும் பொறுப்பேற்க வேண்டும்.
காவிரி விவகாரத்தை வைத்து ஓட்டு அரசியல் செய்யக்கூடாது என்பதற்கு குடிசை எரியும்போது பீடி பற்ற வைக்கக்கூடாது என்பதை உவமையாக கூறினார்.
காவிரி விவகாரத்தை வைத்து இனிமேலும் ஓட்டு அரசியல் செய்யக் கூடாது என கூறினார்.
#KamalHaasan #Rajinikanth #CauveryVerdict #CauveryWater

