ராமராக பிரபாஸ் நடிக்கும் ராமாயண கதையில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்

ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் ஆதிபுருஷ் என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது.
ராமராக பிரபாஸ் நடிக்கும் ராமாயண கதையில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்
Published on

ராமாயண கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் ஆதிபுருஷ் என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. ஓம் ராவத் இயக்குகிறார். இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர். வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்துக்கு பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை தேர்வு செய்துள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இந்தநிலையில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கீர்த்தி சனோன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன். ஆதிபுருஷ் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது'' என்று பதிவிட்டுள்ளார். ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் ஆதிபுருஷ் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com