கீர்த்தி பாண்டியனின் "அஃகேனம்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதய் கே இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த 'அஃகேனம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கீர்த்தி பாண்டியனின் "அஃகேனம்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். நடிகை கீர்த்தி பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இப்படத்திற்கு 'அஃகேனம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார்

உதய் கே இயக்கியுள்ள 'அஃகேனம்' படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக விக்னேஷ் கோவிந்தராஜன், இசையமைப்பாளராக பரத் வீரராகவன், எடிட்டராக திவேத்தியன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

'அஃகேனம்' படத்தினை ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். 'அஃகேனம்' படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்கேனம் என தலைப்பிடப்பட்ட இந்த பாடலை டிரியா பாண்டியன் மற்றும் டக்கால்டி இணைந்து சண்டி வரிகளில் பாடியுள்ளனர். 

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்த 'அஃகேனம்' படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com