

சென்னை
2021 ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் 2020 ஆம் ஆண்டை சமூக ஊடகங்களில் எவ்வாறு செலவிட்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. டுவிட்டர் இந்தியாவின் ஆண்டு அறிக்கையை # ThisHappened2020 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான கால கட்டங்களில் எந்த தென்னிந்திய திரைப்படங்கள், எந்த தென்னிந்திய நடிகர்கள், எந்த தென்னிந்திய நடிகைகள் பற்றிய பதிவுகள் அதிகமாக இருந்தன என்ற பட்டியலை டுவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 2020ம் ஆண்டில் திரைப்படங்கள் பற்றிய டுவிட்டர் பதிவுகளில் அதிகம் இடம்பெற்ற ஹேஷ்டேக்குகளில் #Master முதலிடம் பிடித்துள்ளது. #VakeelSaab #SarkaruVaariPaata #Valimai #Sooraraipotru #RRR #Pushpa #SarileruNeekevvaru #KGFChapter2 #Darbar ஆகிய படங்கள் வரிசையாக 2 முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக டுவிட்டில் 'தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னட சினிமா fans' Twitter timeline கேட்டாலே சும்மா அதிருதுல! இந்த வருடம் Most Tweeted About திரைப்படங்கள் இதோ..' என வாசகத்தையும் இணைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,'நீங்க ஆவலோடு காத்திட்டுருந்த moment வந்தாச்சு! 2020'ஸ் Most Tweeted About South Indian Superstars, இதோ! என குறிப்பிட்டு 2020ம் ஆண்டில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது.
அதில் முதல் இடத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இடம் பிடித்துள்ளார். பவன் கல்யாண் 2 ம் இடமும் நடிகர் விஜய் 3ம் இடமும் ஜூனியர் என்டிஆர் 4 இடமும் சூர்யா 5ம் இடமும் அல்லு அர்ஜுன் 6ம் இடமும் ராம் சரண் 7ம் இடமும் தனுஷ் 8ம் இடமும் மோகன் லால் 9ம் இடமும் சிரஞ்சீவி 10ம் இடமும் பிடித்துள்ளனர்.
அதே போல் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட 2020ம் ஆண்டில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகைகள் பட்டியலின் படி, கீர்த்தி சுரேஷ் முதலிடமும், காஜல் அகர்வால் 2ம் இடமும் சமந்தா 3ம் இடமும் ராஷ்மிகா 4ம் இடமும் பூஜா ஹெக்டே 5ம் இடமும் டாப்சு 6ம் இடமும் தமன்னா 7 இடமும் ரகுல் ப்ரீத் சிங் 8ம் இடமும் ஸ்ருதி ஹாசன் 9ம் இடமும் திரிஷா 10ம் இடமும் பிடித்துள்ளனர்.
இதனிடையே நடிகர்கள் நடிகைகள் பட்டியலில் அஜித், நயன்தாரா ஆகியோர் இடம் பெறவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.