கீர்த்தி சுரேஷின் 2-வது பாலிவுட் படம்...வெளியான முக்கிய அப்டேட்

கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் "ரவுடி ஜனார்தனா" படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ’பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது. இருப்பினும், இந்த தோல்வி அவரை பாதிக்கவில்லை. ஏனெனில் அவர் இப்போது மற்றொரு புதிய இந்தி படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டைகர் ஷெராப் மற்றும் வித்யுத் ஜம்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கும் அதிரடி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை கீர்த்தி தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து "ரவுடி ஜனார்தனா" படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story






