அதிரடி கதையில் கீர்த்தி சுரேஷ்

கே.சந்துரு டைரக்டு செய்யும் ‘ரிவால்வர் ரீட்டா' என்ற அதிரடி கதையம்சம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதிரடி கதையில் கீர்த்தி சுரேஷ்
Published on

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்துக்கு 'ரிவால்வர் ரீட்டா' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை கே.சந்துரு டைரக்டு செய்கிறார். இவர் சென்னை 28, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். `சரஸ்வதி சபதம்' படத்துக்கு பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பது போன்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பழைய கால போஸ்டர் தோற்றத்தில் இது உள்ளது. இதர நடிகர்-நடிகை விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. படப் பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com