'ரகு தாத்தா' படத்தின் `ஏக் காவ் மே' பாடல் வெளியானது

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படத்தின் 'ஏக் காவ் மே' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 -ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

தற்பொழுது படத்தின் 2-ம் பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கானா பாடகரான கானா விமலா பாடியுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com