நகைக்கடை உரிமையாளர் மகனை திருமணம் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்? புதிய தகவல் வைரல்

கேரள நகைக்கடை உரிமையாளர் மகனும் கீர்த்தி சுரேசும் 13 வருடங்களாக பழகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நகைக்கடை உரிமையாளர் மகனை திருமணம் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்? புதிய தகவல் வைரல்
Published on

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷை திருமண வதந்திகள் விடாது துரத்துகின்றன. ஏற்கனவே கேரள அரசியல்வாதியின் மகனை அவர் மணக்க இருப்பதாக தகவல் பரவியது.

துபாயில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வலைத்தளத்தில் பகிர அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று பேச்சு கிளம்பியது.

சிறுவயதில் இருந்தே தன்னுடன் பழகிய நண்பரை மணக்கிறார் என்று இன்னொரு தகவல் வெளியானது. இதற்கெல்லாம் குடும்பத்தினர் மறுப்பு சொல்லி வந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் திருமண ஏற்பாடுகள் ஓசையில்லாமல் நடந்து வருகிறது என்றும் புதிய தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கேரள நகைக்கடை உரிமையாளர் மகனும் கீர்த்தி சுரேசும் 13 வருடங்களாக பழகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது வதந்தியா? உண்மையா? என்று தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ் தரப்பிலும் இன்னும் விளக்கம் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com