கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு விளக்கம்
Published on

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேசை சிலருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதற்கு மறுப்பும் வெளியானது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் கீர்த்தி சுரேசும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

இதையடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது. இதற்கு கீர்த்தி சுரேசின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் "கீர்த்தி சுரேசும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்தபோது எங்களோடு பல தடவை வந்து இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும்.

எனது நண்பர்கள் விளக்கம் அளிக்கும்படி வற்புறுத்தியதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com