கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கொள்கையை விட்டுக்கொடுத்து கவர்ச்சியாக நடிக்க தயாராகி உள்ளார்.
கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்
Published on

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். குடும்ப பாங்கான படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக தோன்றவும், கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் மறுத்தார். தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அப்படியே பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி உள்ளிட்ட படங்கள் வந்தன. அந்த படங்களில் கீர்த்தி சுரேஷ் கஷ்டப்பட்டு நடித்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. டைரக்டர்களும் கவர்ச்சிக்கு மறுக்கும் கீர்த்தி சுரேசை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கொள்கையை விட்டுக்கொடுத்து கவர்ச்சியாக நடிக்க தயாராகி உள்ளார். இதனை நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தன்னை கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com