“ரவுடி ஜனார்தனா” படத்தின் கீர்த்தி சுரேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ரவி கிரண் கோலா இயக்கும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
“ரவுடி ஜனார்தனா” படத்தின் கீர்த்தி சுரேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on: 

‘ரவுடி ஜனார்தனா’ படக்குழு கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டது.

கீர்த்தி சுரேஷ் - விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் முதல் படம்

ரவி கிரண் கோலா இயக்கத்தில் எஸ்விசி பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. டைட்டில் கிளிம்ப்ஸ் மூலம் இது ஒரு பீரியட் படம் என தெரிகிறது. இது விஜய் தேவரகொண்டாவின் 15-வது படமாகும்.

ஜோடியாக இதுவரை இருவரும் நடித்திருக்காதநிலையில், இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் படங்கள் சில காலமாக பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், ‘ரவுடி ஜனார்தனா’ படக்குழு கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டது. பாரம்பரிய உடையில், கதாநாயகனுடன் படகில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் வசீகரமாகக் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர் விஜய் தேவரகொண்டாவின் தோற்றத்தை வேண்டுமென்றே மறைத்துள்ளது.

கதாநாயகி ‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் அழகான பக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், இப்படம் ஒரு அழகான அனுபவத்தை வழங்கும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். கிறுத்தோ சேவியர் இசையமைக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com