கீர்த்தி சுரேஷின் “ரப்​தார்” படத்தின் ரிலீஸ் தேதி அறி​விப்பு

ஆதித்யா நிம்​பல்​கர் இயக்கத்தில் ராஜ்கு​மார் ராவ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரப்தார்’ படம் ஜூலை 24ம் தேதி வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷின் “ரப்​தார்” படத்தின்  ரிலீஸ் தேதி அறி​விப்பு
Published on

கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இது ‘தெறி’ படத்​தின் ரீமேக்​காகும். அட்லி தயாரித்த இந்​தப் படம் பெரிய வரவேற்பை பெற​வில்​லை. நடிகை கீர்த்தி தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து "ரவுடி ஜனார்தனா" படத்தில் நடித்து வருகிறார்,

இதையடுத்து அவர் நடித்​துள்ள மற்​றொரு இந்தி படத்​துக்​கு, ‘ரப்தார்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். ராஜ்கு​மார் ராவ் ஹீரோவாக நடித்​துள்ள இப்​படத்​தில் அனு​ராக் தாக்​கூர், ரோஹன் வர்​மா, தான்யா மணிக்​தலா, ரஜத் கபூர் உள்​ளிட்ட பலர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

‘செக்​டார் 36’ படத்தை இயக்​கிய ஆதித்யா நிம்​பல்​கர் இயக்கியுள்ளார். ராஜ்கு​மார் ராவின் மனைவி பத்​ர லே​கா, தனது கம்பா பிலிம்ஸ் சார்​பில் தயாரித்​துள்​ளார். இப்​படத்​தின் தலைப்பை​யும் ரிலீஸ் தேதி​யை​யும் படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி ஜூலை 24ல் இப்​படம் திரை அரங்​கு​களில் வெளி​யாகும் என்று அமே​சான் எம்​ஜிஎம் ஸ்டூடியோஸ் சமூக வலை​தளம் மூலம் அறி​வித்​துள்​ளது.

“வேக​மாக வளரும் ஒரு ‘ஸ்​டார்ட்​-அப்’ நிறு​வனத்​தை​யும், லட்​சிய வெறி கொண்ட ஒரு ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் இடையி​லான உணர்ச்​சிகர​மான உறவை​யும் மையப்​படுத்​திய கதை இது. பணம், அதி​காரம், பேராசை ஆகியவை பெரு​கும்​போது, வெற்றி பெற வேண்​டும் என்ற அவர்​களது தாகம் காதலோடு மோதத் தொடங்​கு​கிறது. பிறகு என்ன நடக்​கிறது என்று படம் செல்​லும். இந்​தி​யா​வின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாக​வும் அறிவை விதைக்க வேண்​டிய கல்வி எப்​படி வணிக மயமானது என்பதையும் இப்​படம் பேசும்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com