கீர்த்தி சுரேஷின் “சத்யவான் சாவித்திரி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கீர்த்தி சுரேஷின்  “சத்யவான் சாவித்திரி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் விறுவிறுப்பாக உருவாகி, சமீபத்தில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்தது.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி காரணமாக, இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ’ வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com