“யூத்” பட தலைப்பு குறித்து கென் கருணாஸ் விளக்கம்

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.
“யூத்” பட தலைப்பு குறித்து கென் கருணாஸ் விளக்கம்
Published on

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘யூத்’ படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது. சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பறந்தனே பெண்ணே’ பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான ‘ஆச புள்ள’ வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

‘யூத்’ திரைப்படத்தின் ரிலீசை ஒட்டி இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பட தலைப்பை தேர்வு செய்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “படத்தின் தலைப்புக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர். எனினும், எனது தந்தை கருணாஸ் மற்றும் நடிகர் விஜய் என இருவரின் அரசியல் முற்றிலும் முரணாக இருக்கிறதே என்று எனது தாய் கேட்டார்.

எனக்கு இந்தப் படத்தின் தலைப்பு கிடைத்தது சிறப்பான விஷயம். மேலும், இந்த தலைப்பை வாங்கியது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட அழுத்தம் தான். இந்த தலைப்புக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. படம் வெளியாகும் போது பட டைட்டில் குறித்து அப்படி யோசிக்க மாட்டார்கள்” என்றார். இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com