கென் கருணாஸின் “யூத்” படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.
கென் கருணாஸின் “யூத்” படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

‘யூத்’ படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ‘யூத்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில், ‘யூத்’ திரைப்படத்தின் 2வது பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com