10 நாட்களில் கென் கருணாஸின் “யூத்” படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான ‘யூத்’ படம் 10 நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 நாட்களில் கென் கருணாஸின்  “யூத்” படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

இவர் தற்போது ‘யூத்’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

‘யூத்’ படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்திய இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 10 நாட்களில் ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com