கென்யா: விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மசாய் பழங்குடி இளைஞர்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஜய்க்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கென்யா: விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மசாய் பழங்குடி இளைஞர்கள்
Published on

நைரோபி,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில், விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கென்யாவில் உள்ள மசாய் பழங்குடியின இளைஞர்கள், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். த.வெ.க. கொடியுடன் பாடல் பாடி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மசாய் பழங்குடியினத்தவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com