கேரளா: ஊட்டுகுளங்கர பகவதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்: அஜித்தின் டாட்டூ புகைப்படம் வைரல்


கேரளா: ஊட்டுகுளங்கர பகவதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்: அஜித்தின் டாட்டூ புகைப்படம் வைரல்
x
தினத்தந்தி 24 Oct 2025 10:25 PM IST (Updated: 25 Oct 2025 5:55 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோவிலில் நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கி உள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அஜித் குமார் குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் மேலாடை அணியாத நிலையில் அவர் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள போட்டோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குல தெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.

1 More update

Next Story