கேரளா வெள்ள பாதிப்பு: ரூ.51 லட்சத்துடன் சொந்த உடைகளை வழங்கிய அமிதாப்பச்சன்

வரலாறு காணாத மழை வெள்ளம் கேரளாவையே புரட்டி போட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
கேரளா வெள்ள பாதிப்பு: ரூ.51 லட்சத்துடன் சொந்த உடைகளை வழங்கிய அமிதாப்பச்சன்
Published on

ரோடுகள் வெள்ள அரிப்பால் துண்டிக்கப்பட்டு உள்ளது. இழப்பை சரி செய்ய ரூ.2,500 கோடி செலவு ஆகும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது.

தற்போது மழை வெள்ளம் வடிந்து நிவாரண பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. நிவாரண உதவிகளும் குவிகிறது. நடிகர் நடிகைகள் நிதி வழங்குகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், பிரபு, லாரன்ஸ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா பட நிறுவனமும் முதல்அமைச்சர் பினராயி விஜயனிடம் ரூ.1 கோடி வழங்கி உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிகின்றன.

நடிகர் அமிதாப்பச்சன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கி வைத்திருந்த உடைகளை 6 பெட்டிகளில் அடைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் ரசூல் பூக்குட்டியிடம் சேரும்படி அவற்றை அனுப்பி இருக்கிறார். அந்த பெட்டிகளில் விலை உயர்ந்த 25 பேண்ட்கள், 20 சட்டைகள், 80 ஜாக்கெட்கள், 40 ஷூக்கள் போன்றவை இருந்தன. அத்துடன் ரூ.51 லட்சம் நிவாரண நிதியும் அனுப்பி உள்ளார்.

இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, வித்யாபாலன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் வெள்ள நிதி வழங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com