மோசடி வழக்கில் சன்னி லியோனை கைது செய்ய தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம்

மோசடி வழக்கில் சன்னி லியோனை கைது செய்ய தடை விதித்து குற்றப்பிரிவு போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடி வழக்கில் சன்னி லியோனை கைது செய்ய தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த ஷியாஸ் என்பவர் சன்னிலியோன் மீது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்த சன்னிலியோன் தன்னிடம் ரூ.29 லட்சம் வாங்கியதாகவும் ஆனால் ஒப்புக்கொண்டபடி அந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை என்றும் தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தர மறுக்கிறார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து சன்னி லியோனிடம் கேரள போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது சொன்ன தேதியில் ஷியாஸ் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் ஐந்து தடவை தேதியை மாற்றி கொடுத்தும் குறிப்பிட்ட தேதியில் நிகழ்ச்சியை நடத்தாததால் எனது கால்ஷீட் வீணாகி விட்டது என்றும் தெரிவித்தார். மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்தினால் கலந்து கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் ஷியாஸ் தரப்பு சன்னி லியோன் கூறுவது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சன்னி லியோனை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com