நடிகர் விக்ரம் வீடியோ மூலம் போதை விழிப்புணர்வு ஏற்படுத்திய கேரளா போலீஸ்

நடிகர் விக்ரமின் ரீல்ஸை வைத்து கேரள காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம் வீடியோ மூலம் போதை விழிப்புணர்வு  ஏற்படுத்திய கேரளா போலீஸ்
Published on

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சியான் விக்ரம் கடந்த 17ம் தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.விக்ரம் தனது ரசிகர்களுக்காக அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தக் காணொளியை துருவ் விக்ரம் படம்பிடித்திருந்தார்.பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் சமூக வலைதளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. விக்ரமின் ரீல்ஸ் வைத்து ரசிகர்கள் பல்வேறு விதமான மீம்ஸ் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் கேரளா காவல் துறை விக்ரமின் ரீல்ஸை பயன்படுத்தி போதைத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த வீடியோவை கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் மலையாள நடிகர் ஜிபின் கோபிநாத் நடித்துள்ளார். “நாங்கள் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறோம்" என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைக் கேரளா போலீஸார் பகிர்ந்துள்ளனர். அத்துடன், “16 வயது அல்லது 60 வயது என்பது பிரச்னையில்லை; போதைப்பொருள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் விக்ரம், அதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். கேரள காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com