அவசர உதவி எண்ணில் அழைக்க கேரள போலீஸ் வெளியிட்ட விஜய்யின் பட காட்சி

கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அம் மாநில காவல்துறை, நடிகர் விஜயின் படங்களை வைத்து, புது யுக்தியின் மூலம் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.
அவசர உதவி எண்ணில் அழைக்க கேரள போலீஸ் வெளியிட்ட விஜய்யின் பட காட்சி
Published on

பொதுமக்கள் அவசர உதவி தேவைகளுக்கு அழைக்க தனித்தனி உதவி எண்கள் இருப்பதை மாற்றி மத்திய அரசு நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு, தீயணைப்பு, போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அழைக்க 112 என்ற ஒரே அவசர எண் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் பல மாநிலங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கேரள அரசும் இணைந்துள்ளது. தற்போது 112 அவசர எண்ணை விளம்பரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார் அதற்கு விஜய்யின் போக்கிரி பட காட்சியை பயன்படுத்தி உள்ளனர்.

அந்த வீடியோவில் அசினை ரவுடிகள் சூழ்ந்து பிரச்சினை செய்கிறார்கள். அப்போது அவரது தம்பி செல்போனில் 112 என்ற எண்ணை டயல் செய்வது போன்றும், அடுத்த சில நொடிகளில் போலீஸ் சீருடையில் விஜய் அங்கு வந்து நிற்பது போன்றும் வீடியோவை கேரள போலீசின் அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியிட்டு எவரேனும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால், 112 எண்ணை டயல் செய்யுங்கள், நாங்கள் உங்களுக்காக வந்து நிற்போம் என்று பதிவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவுக்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com