பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் விஜய் பாபு சரணடைய முடிவு!

பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் வரும் 30-ம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் விஜய் பாபு சரணடைய முடிவு!
Published on

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மயக்க மருந்து கொடுத்து பல தடவை இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விஜய்பாபு துபாய் தப்பி சென்று விட்டார். நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. துபாயில் உள்ள விஜய்பாபுவை ஐக்கிய அமீரக போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அங்கிருந்து ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து விஜய்பாபுவின் சொத்துகளை முடக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் கேரள ஐகோர்ட்டில் விஜய்பாபுவின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அவரது வக்கீல் வருகிற 30-ந்தேதி விஜய்பாபு துபாயில் இருந்து கேரளா திரும்ப விமானத்தில் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டை நீதிபதியிடம் காட்டி அன்றைய தினம் கோர்ட்டிலோ அல்லது போலீசிலோ சரண் அடைவார் என்று தெரிவித்தார். 30-ந்தேதி கேரளா வரும் விஜய்பாபுவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com