பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த அக்சய் குமார், மாதவன்


Kesari Chapter 2: Akshay Kumar, R Madhavan And Ananya Panday Visit Golden Temple
x

அக்சய் குமார் நடித்துள்ள 'கேசரி சாப்டர் 2’ படம் வருகிற 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கேசரி சாப்டர் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் மாதவன், அனன்யா பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படம் வெளியீட்டை நெருங்கி வரும்நிலையில், நடிகர் அக்சய் குமார், மாதவன் மற்றும் நடிகை அனன்யா பண்டே ஆகியோர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது.

1 More update

Next Story