'பாடல் சர்ச்சையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன்' - கெட்டிகா ஷர்மா


Ketika Sharma learns from item song controversy
x

’ராபின்ஹுட்’படத்தில் நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடிய அதிதா சர்ப்ரைஸ் பாடல் பெரும் சர்ச்சையானது.

சென்னை,

கடந்த மார்ச் மாதம் நிதின் , ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான படம் 'ராபின்ஹுட்'. இப்படத்தில் நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடிய அதிதா சர்ப்ரைஸ் என்ற பாடல் பெரும் சர்ச்சையானது. இதில், அவர் போட்ட ஸ்டெப்ஸ் விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில், 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் சர்ச்சை குறித்த கேள்விக்கு கெட்டிகா பதிலளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

'ஒரு நடிகையாக நீங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதேபோல் கவர்ச்சி பாடலுக்கும் நடனமாடலாம். அதில் எதுவும் தவறில்லை. அதுவும் படத்தில் ஒரு பகுதிதான்.

மக்கள் படம் பிடித்திருந்தால் எப்படி ரசிக்கிறார்களோ? அதேபோல், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், விமர்சிப்பார்கள்.

நான் இந்த பாடலுக்கு நடமாடும்போது இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் கவனமாக இருப்பேன்' என்றார்

1 More update

Next Story