சோசியல் மீடியாவில் இருந்து விலகிய பிரபல நடிகை...- ரசிகர்கள் அதிர்ச்சி


Ketika Sharma who quits social media...- Fans are shocked!
x
தினத்தந்தி 29 Aug 2025 5:20 PM IST (Updated: 29 Aug 2025 5:47 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கெட்டிகா ஷர்மா, சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலக முடிவு செய்துள்ளார்.

சென்னை,

சோசியல் மீடியாவில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக் கொள்வதாக நடிகை கெட்டிகா ஷர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சரியான காரணத்தைக் குறிப்பிடாமல், சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக கெட்டிகா குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், விரைவில் திரும்பி வருவேன் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

''ரொமாண்டிக்'' மற்றும் ''ரங்கா ரங்கா வைபவங்கா'' போன்ற படங்களில் நடித்து பிரபலமான கெட்டிகா ஷர்மா, “ராபின்ஹுட்” படத்தில் “அதிதா சர்ப்ரைஸ்'' என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி சர்ச்சையில் சிக்கினார். கடைசியாக “சிங்கிள்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

1 More update

Next Story