பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இணையும் கே.ஜி.எப் பிரபலம்?

ஜூனியர் என்.டி.ஆர், அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இணையும் கே.ஜி.எப் பிரபலம்?
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கே.ஜி.எப் படத்திற்கு  இசையமைத்து பிரபலமான ரவி பாசுர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படத்திற்கும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com