

பெங்களூரு,
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2'. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் படமானது வெளியாகியுள்ளது.