கே.ஜி.எஃப் 2' படத்தின் ட்ரெய்லர் இந்திய அளவில் புதிய சாதனை.!

டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
கே.ஜி.எஃப் 2' படத்தின் ட்ரெய்லர் இந்திய அளவில் புதிய சாதனை.!
Published on

பெங்களூரு,

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் டிரைலர் நேற்றுமுன்தினம் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர், வெளியான 24 மணி நேரத்தில் இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com