'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டம்... நயன்தாரா பற்றி எதிர்பாரா பதில் கொடுத்த குஷ்பூ


Khushboo gave an unexpected answer about the title of Lady Superstar
x

தன்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூறினார்.

சென்னை,

'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். நேற்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பா, லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த நயன்தாரா பற்றி பேசினார். அவர் கூறுகையில்,

'நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது. பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எங்கள் காலத்திலெல்லாம் பட்டம் கொடுத்து பார்த்ததில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நல்லா இருக்கும்' என்றார்.

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழக்கப்பட்டு வந்த இவர் , சமீபத்தில், தன்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

1 More update

Next Story