ராதாரவியை கண்டித்த குஷ்பு, சமந்தா

நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகர் ராதாரவிக்கு நடிகைகள் குஷ்பு, சமந்தா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராதாரவியை கண்டித்த குஷ்பு, சமந்தா
Published on

நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகர் ராதாரவியை தொடர்ந்து பலர் கண்டித்து வருகிறார்கள். நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

ஆண்கள் தங்கள் அகம்பாவத்தை வலுப்படுத்திக்கொள்ள கையாளும் வழிமுறையாக ஒரு பெண்ணை இழிவுபடுத்தவும், அவளது குணத்தை கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். ஒரு பெண் எப்படி வாழ்கிறாள். என்ன செய்கிறாள் என்பதை பற்றி யாரும் பேசக்கூடாது. நயன்தாரா அகத்திலும், புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும் அதை கேட்டு கைதட்டி ரசிப்பவர்களும் திரைப்படத்துறைக்கு அவமான சின்னங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா டுவிட்டரில், ராதாரவி, தான் கூறியது சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரை பார்க்க பாவமாக இருக்கிறது. ராதாரவியின் ஆன்மா அமைதியை தேட முயல்கிறது. அந்த அமைதி நயன்தாராவின் படங்களை பார்த்தால் அவருக்கு கிடைக்கும். அதற்காக நயன்தாராவின் அடுத்த படத்துக்கு டிக்கெட் எடுத்து அவருக்கு அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை டாப்சி கூறும்போது, நயன்தாரா குறித்து சொன்ன வார்த்தைகள் அருவருப்பானவை. ஒருவர் கேரக்டர் குறித்து சான்றிதழ் அளிக்க நீங்கள் யார். திறமையான நடிகை நயன்தாராவுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் பேசுவார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com