

சென்னை,
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் காலை 4 மணிக்கே வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தை பார்த்த நடிகை குஷ்பு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் 'தல உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது' என்று அஜித்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.