சின்னத்தம்பி 2-ம் பாகம் எடுக்க குஷ்பு விருப்பம்

நடிகர் பிரபுவும். குஷ்புவும் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.
சின்னத்தம்பி 2-ம் பாகம் எடுக்க குஷ்பு விருப்பம்
Published on

நடிகர் பிரபுவும். குஷ்புவும் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளதில் வைரலாகி வருகிறது. புதிய ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இளம் பெண்ணாக மாறிய புகைப்படம் ஒன்றையும் குஷ்பு பகிர்ந்துள்ளார்.

இருவரும் கடும் உடற்பயிற்சிகள் செய்து மெலிந்து இருக்கிறார்கள். பிரபு பொன்னியின் செல்வன் படத்துக்காக எடையை குறைத்து இருக்கிறார். பிரபு, குஷ்புவின் புதிய தோற்றங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாகி உள்ளனர். இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் பெரிய வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தை இயக்கிய பி.வாசு தற்போது லாரன்சை வைத்து சந்திரமுகி 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்துக்கு முன்பாக பிரபு, குஷ்புவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்து சின்னத்தம்பி 2-ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பி.வாசுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பதிவுக்கு குஷ்புவும் சம்மதம் தெரிவித்து வலைத்தளத்தில் தம்ஸ் அப் மற்றும் ஈமோஜிகளை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com