மோகன் ஜோடியாக குஷ்பு

விஜய் ஸ்ரீஜி இயக்கும் ஒரு புதிய படத்தில் குஷ்பு, மோகன் ஜோடியாக நடிக்கிறார்.
மோகன் ஜோடியாக குஷ்பு
Published on

தமிழ் சினிமாவில் கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் இதயங்களில் நிறைந்து இருக்கும் நடிகை குஷ்பு. வெள்ளித்திரையில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் சின்ன திரையிலும் வலம் வந்து தாய்மார்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

சினிமா, அரசியல் இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். அவரது உடல் மெலிவுக்கு காரணம் என்ன? என்று அனைவருமே யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு விடை தெரியவந்துள்ளது.

விஜய் ஸ்ரீஜி இயக்கும் ஒரு புதிய படத்தில் குஷ்பு, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் 80-களில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்த மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்காக இயக்குனர் விஜய் ஸ்ரீஜி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் தனது உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்து இருக்கிறார் குஷ்பு.

மெலிவான குஷ்புவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com