தேவா மறைவுக்கு குஷ்பு உருக்கமான இரங்கல்

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார்.
தேவா மறைவுக்கு குஷ்பு உருக்கமான இரங்கல்
Published on: 

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு, “10 நாள்களுக்கு முன்பாக சிரித்துக்கொண்டும் என்னை வாழ்த்தியவர் தற்போது உயிருடன் இல்லை” என கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். ‘மனசுக்கேத்த மகராஜா' என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குஷ்பு இரங்கல்

இந்த நிலையில், அவரது இறப்பு குறித்து குஷ்பு தனது எக்ஸ் பதிவில் “முழுவதுமாக நிலைகுலைந்துவிட்டேன். நம்பவேமுடியவில்லை. 10 நாள்களுக்கு முன்பாக ஆரோக்கியமாக சிரித்துக்கொண்டும் என்னை வாழ்த்தியவர் தற்போது உயிருடன் இல்லை. தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்டவர். தேன் போன்ற இனிமையான மனிதர் காற்றை போல இலகுவான மனிதர். இசை உலகிற்கும் சினிமாவுக்கும் அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது. விரைவிலேயே சென்று விட்டார். ஏன்? உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் தேவா சார். ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்பு நடித்த அண்ணாமலை, விரலுக்கேத்த வீக்கம், மின்சார கண்ணா உள்பட பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com