குஷ்புவின் அந்த நாள் நினைவலைகள்


குஷ்புவின் அந்த நாள் நினைவலைகள்
x
தினத்தந்தி 26 Dec 2025 7:30 PM IST (Updated: 26 Dec 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

அந்த நாளை இன்று நினைத்தாலும் ஒரு விதமான திகில் தெரிகிறது என குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

சுனாமி தின நினைவுகளை திகிலுடன் நடிகை குஷ்பு கூறியதாவது:-

24-ந்தேதி கடற்கரையில் ஷூட்டிங்கில் இருந்தோம். 25-ந்தேதியும், 26-ந்தேதியும் விடுமுறை. அன்றுதான் இந்த கோர சம்பவத்தை நேரில் கண்டேன்.

சுனாமி தாக்கிய அன்று காலையில் எனது கணவருடன் ஒரு வயதான இளைய மகள் தூங்கி கொண்டிருந்தாள். மூத்தவள் விளையாடி கொண்டிருந்தாள். திடீரென்று நான் உட்கார்ந்து இருந்த நாற்காலி ஆடியது. சிறிது நேரத்தில் மீண்டும் அசைவது போல் இருந்தது.அப்போது நாங்கள் அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தோம். அதை பார்த்ததும் பூகம்ப பீதியில் அனைவரும் எழுந்து வெளியே ஓடி வந்தோம். அடுத்த சில மணி நேரங்களில் சுனாமி... ஆயிரகணக்கான மக்கள் பலியாகிவிட்டார்கள் என்று வந்த தகவல்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நாளை இன்று நினைத்தாலும் ஒரு விதமான திகில் தெரிகிறது.

அதேபோல் மலேசியாவில் ஒருமுறை கப்பலில் கடலில் இருந்தபோது சுனாமி ஏற்பட்டது. அப்போது சில மணி நேரம் கடலில் காத்திருந்து விட்டு கடல் அமைதியான பிறகு கரை திருப்பினோம். சுனாமி என்றாலே பயம்தான் என்றார்.

1 More update

Next Story