குஷி கபூரை 'இளவரசி' என புகழ்ந்த பிரபல பாலிவுட் நடிகை

இப்ராகிம் அலி கானுக்கு ஜோடியாக குஷி கபூர் நடித்துள்ள படம் "நாடானியன்"
Khushi Kapoor looked like a 'princess' in that song - Janhvi Kapoor
Published on

சென்னை,

நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாகி இருக்கும் படம் "நாடானியன்" . கரண் ஜோஹர் தயாரித்த இப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான "தி ஆர்ச்சீஸ்" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்ராகிம் அலி கானுடம் குஷி கபூர் நடித்துள்ள "நாடானியன்" அவரது மூன்றாவது படமாகும். கடந்த 7-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்' திர்கித் தூம்'. விஷால் தத்லானி, அமிதாப் பட்டாச்சார்யா, ஜிகர் சரையா மற்றும் ஷ்ரதா மிஸ்ரா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இந்நிலையில் ஜான்வி கபூர், இப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்து, அதில் குஷி கபூர் இளவரசிபோல இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com