தனுசுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் சில படங்களில் தனுஷ் நடித்துள்ளார்
Kiara Advani opposite Dhanush in Hindi
Published on

மும்பை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார்.

தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் கடந்த இரு படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராயுடன், தனுஷ் இணைய போவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com