பிரபல ஹாலிவுட் நடிகை போல மாற ஆசை...! அறுவை சிகிச்சையால் மாடல் அழகி மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை போல மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி மரணமடைந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகை போல மாற ஆசை...! அறுவை சிகிச்சையால் மாடல் அழகி மரணம்
Published on

கலிபோர்னியா

பிரபல ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரை போல முக அமைப்பு வேண்டும் என்ற ஆசையில் அவரது சில ரசிகர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி என்ற மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாறுவதற்கு ஆசைப்பட்டு பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட நிலையில் இவர் கடந்த 26-ந் தேதி மரணமடைந்தார்.

34 வயதான கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தவறான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் அவரது இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காக சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டி வருகின்றனர்.

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட மாடலுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com